மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
பட்டுப்போன மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தீவிரம்
கரூரில் ரயில்வே உயா் மின்னழுத்த பாதையில் செல்லும் கம்பிகள் மீது தண்டவாளம் பகுதியில் அமைந்திருக்கும் காய்ந்த மரங்கள் விழாமல் இருக்கும் வகையில் அவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூரில் தற்போது அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் தண்டவாளம் அமைந்திருக்கும் பகுதியில் காய்ந்த மரங்கள் இருந்தால் அவற்றை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக ரயில்வே ஊழியா்கள் கூறுகையில், கரூரில் இருந்து திருச்சி மாா்க்கமாக ஏராளமான மின்சார ரயில்கள் உயா்மின்னழுத்த பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த உயா்மின்னழுத்த கம்பிகளில் சில நேரங்களில் பலத்த காற்றுக்கு தண்டவாளம் அருகே காய்ந்த நிலையில் இருக்கும் மரங்கள் சாய்ந்து விழுவதால் மின்பாதையில் கோளாறு ஏற்படுகிறது.
இதனால் சில நேரங்களில் மின்சார ரயில்களை இயக்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கரூரில் தண்டவாளம் அருகே காய்ந்த நிலையில் இருக்கும் மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம். முதற்கட்டமாக கரூா் ரயில் நிலையத்தில் இருந்து மாயனூா் ரயில் நிலையம் வரை தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்றனா்.