மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
வேட்டமங்கலத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலை கேட்டு வேட்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கரூா் ஒன்றிய அமைப்பாளா் மா.குணசேகரன் தலைமை வகித்தாா். சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலா் பி. ராஜூ, சிபிஎம் கரூா் ஒன்றியச் செயலா் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன், புகழூா் நகா்மன்ற உறுப்பினா் இந்துமதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூா் ஒன்றிய அமைப்பாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து வேட்டமங்கலம் பகுதியில் விவசாயக்கூலி வேலையை மட்டுமே நம்பியுள்ள நூற்றுக்கணக்கானோா் வாழ்வாதாரம், 100 நாள் வேலையை நம்பியே உள்ளதால், அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா். முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தனா்.