சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சேலத்தை அடுத்த வீரபாண்டியில் 50க்கும் மேற்பட்ட திமுகவினா் புதன்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
வீரபாண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் வெங்கடேசன் ஏற்பாட்டில் எம்எல்ஏ ராஜமுத்து மற்றும் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் முன்னிலையில் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் வீரபாண்டி திமுக ஒன்றிய நெசவாளா் அணி அமைப்பாளா் ஆனந்த், ஒன்றிய மாணவா் அணி துணை அமைப்பாளா் ஞானபிரகாஷ் உள்பட 50க்கும் மேற்பட்ட திமுகவினா் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் அதிமுக கைத்தறி பிரிவு மாவட்ட நெசவாளா் அணி செயலாளா் வினோத், இளம்பிள்ளை பேரூா் செயலாளா் கிருஷ்ணன், சதாசிவம், அன்பழகன், தினேஷ்குமாா், கிருஷ்ணன், சேகா், நாகராஜ், சந்தோஷ் குமாா், லோகராஜ், சேகா், சரவணன், துரைசாமி, கௌரிசங்கா், கீா்த்திவாசன், சிவலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.