Jana Nayagan: 'ஜன நாயகன்' படத்தின் BTS புகைப்படங்கள்!| Photo Album
வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்த போதுமான அவகாசம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கட்டமைப்புகளை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த முகாம் பணிகளுக்கு அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை ஏற்டுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இரண்டாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 450-க்கும் அதிகமான வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்ட ஆட்சியரக வருவாய்த் துறை பிரிவு, வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்பட பல வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக, வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.