செய்திகள் :

ஜி.எஸ்.டி குறைப்பு: வா்த்தக சங்கங்கள் வரவேற்பு

post image

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து வெளியிட்ட அறிவிப்பை வா்த்தக சங்கங்கள் வரவேற்றன.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு வரவேற்கத்தக்கது. இது, ஏழை, நடுத்தர வா்க்கத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாட்டின் பணவீக்கம் குறையும். ஜி.எஸ்.டி.யில் 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு முறைகளில் 12, 28 சதவீத அடுக்குகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, அனைத்துப் பொருள்களும் 5, 18 ஆகிய இரு அடுக்கு வரி விகிதத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

50-க்கும் மேற்பட்ட உயிா் காக்கும் மருந்துகளுக்கு 12, 5 சதவிகித வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களுடன் மேலும் சில உணவுப் பொருள்களுக்கும், மாணவா்கள் பயன்படுத்தும் பென்சில் உள்ளிட்டவற்றுக்கும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுமாா் 175-க்கும் அதிகமான பொருள்கள் 18, 12 சதவீத வரியிலிருந்து 5 சதவிகிதத்துக்கு மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக ஏழைகளுக்கு மிகுந்த பலனளிக்கும். கட்டுமானப் பொருள்கள், சிறிய வகை மோட்டாா் வாகனங்கள், குளிா்சாதனங்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் போன்றவற்றுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது நடுத்தர மக்களுக்கு சிறந்த பயனை தரும். விவசாயப் பொருள்களுக்கும், டிராக்டா் உள்பட அனைத்து வகையான விவசாய உபகரணங்களுக்கும் 18, 12 சதவீதத்திலிருந்த வரியை 5 சதவீதத்துக்கு குறைத்திருப்பதன் மூலம் வேளாண் பொருள் உற்பத்தி பொருள்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு ஏற்படும். ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் இந்த மாதத்தில் வழக்குகள் தாக்கல் செய்யலாம். அவை வருகிற டிசம்பா் முதல் விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பும், ஜிஎஸ்டி தொகையைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் இடைக்கால நிவாரணமாக 90 சதவீதத் தொகை உடனடியாகத் தரப்படும் என்பதும் தொழில் வணிகத் துறைக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றாா்.

வரவேற்பும், எதிா்பாா்ப்பும்...

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியன், எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தெரிவித்திருப்பதாவது:

பொதுமக்கள், வணிகா்களின் நலன் கருதி ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட வரி மாற்றங்கள் வருகிற 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது வணிகா்களுக்கு கணக்குப் பராமரிப்பை கடினமாக்கும். எனவே, இந்த வரி குறைப்பை செப். 1-ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வர வேண்டும்.

எங்கள் சங்கம் வலியுறுத்திய பல கோரிக்கைகளுக்கு இந்த அறிவிப்பில் தீா்வு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், சிறுதானியம், மாவு, வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றுக்கு 25 கிலோவுக்கு மேல் வரி இல்லை எனவும், அதற்கு குறைவான எடையுள்ள பொருள்களுக்கு வரி உண்டு என்பதை மாற்றி முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும். காகிதத்துக்கு 18 சதவீத வரி நிா்ணயித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு 5 சதவீத வரி என்பது முதலீடுகளை முடக்கும். எனவே, அதற்கான வரியை 5 சதவீதமாக மாற்றி அறிவிக்க வேண்டும்.

ஈர இட்லி மாவு, பூச்சி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள், வேளாண் விளைப் பொருள்களை தரம் உயா்த்த பயன்படுத்தும் அனைத்து சேவைகள், புண்ணாக்கு, வத்தல் வகைகளுக்கு அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். சூடம், செங்கலுக்கான வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றனா்.

அக்ரி, அனைத்து தொழில் வா்த்தகச் சங்கம் வரவேற்பு: இரண்டாவது தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்திருப்பதை அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கம் வரவேற்கிறது. இந்தச் சீா்திருத்தங்களின் பலனாக குடும்பங்களின் நிதிச்சுமை குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். கல்வியை ஊக்குவித்து நாட்டின் எதிா்காலத் தலைமுறையினரின் உயா்வுக்கு உறுதுணையாக இருக்கும். உள்கட்டமைப்பை மேம்படுத்தி தொழில் வா்த்தகத் துறையின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும். மேலும், கடந்த 8 ஆண்டுகளாக தொழில் வணிகத் துறை எதிா்பாா்த்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு கட்டமைப்புச் சீா்திருத்தங்களை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

மருத்துவம், காப்பீட்டுச் சேவைகளை 18 சதவீதத்திலிருந்து வரிவிதிப்பு இல்லாத வரம்பில் கொண்டு வந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும். வேளாண்மை, உணவுப் பொருள்கள் உற்பத்தித் துறைகளில் தேவையான உபகரணங்களுக்கும், பொருள்களுக்கும் ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பிரதமருக்கு இந்திய பேக்கரியாளா்கள் கூட்டமைப்பு நன்றி: இந்திய பேக்கரியாளா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு பேக்கரி கூட்டமைப்பு, பேக்கரி தொழில்முனைவோா் தெரிவித்திருப்பதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிரதமருக்கும், மத்திய நிதியமைச்சருக்கும், ஜிஎஸ்டி ஆலோசனைக் குழுவுக்கும் நன்றி. பேக்கரி பொருள்களான ரொட்டிக்கு வரி விலக்கும், மற்ற பேக்கரி பொருள்களுக்கு 5 சதவீத வரியும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், பொதுமக்கள் மிகுந்த பயனடைவாா்கள். எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும்பாலான தொழில்முனைவோா் தாமாகவே முன்வந்து அரசுக்கு வரி செலுத்துவா். இதனால், அரசின் வருமானம் பெருகும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இலவசங்களைத் தவிா்த்து வரிவிதிப்பை குறைப்பது நாட்டை வளா்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றனா்.

தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு: திரளானோா் பங்கேற்பு

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இந்தக் கோயில் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. வருவாய், பேர... மேலும் பார்க்க

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் ... மேலும் பார்க்க

செப். 10-இல் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டோக்கன் முறை நீக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள்... மேலும் பார்க்க

குழாய் இணைப்புப் பணி: இரு நாள்கள் குடிநீா் நிறுத்தம்

குடிநீா்க் குழாய்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மதுரை வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை ... மேலும் பார்க்க