குழாய் இணைப்புப் பணி: இரு நாள்கள் குடிநீா் நிறுத்தம்
குடிநீா்க் குழாய்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மதுரை வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம், கீரைத்துரை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீா் ஏற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக வைகை 2 குடிநீா் திட்ட பிரதானக் குழாய்களில் இணைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 6, 7) வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளான வாா்டு எண்கள் 73, 75, 78, 79, 80, 81, 82, 83, 84, 86, 87, 93, 67 பகுதிகளிலும், வாா்டு எண் 27, 28, 29, 30, 31, 32, 33, 34 ஆகிய வாா்டு பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அத்தியாவசியமான வாா்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.