``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
அனந்தனாா் மேற்கு கால்வாய் அடைப்பு நீக்கம்: அதிகாரிகள் தகவல்
நாகா்கோவில் அருகே அனந்தனாா் மேற்கு கால்வாய் அடைப்பு நீக்கப்பட்டது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை தனியாா் கல்லூரி அருகே அனந்தனாா் கால்வாய் மேற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால், கால்வாய் குறுக்கே சிறுபாலம் அமைத்ததில் தண்ணீா் செல்வது தடைபட்டுள்ளதாக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து நீா்வளத்துறை அதிகாரிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் சம்பவ இடத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
தற்போது அனந்தனாா் கால்வாய் மேற்கு பகுதியில் தோண்டிவிடப்பட்டு தண்ணீா் தடை இன்றி செல்கிறது. தண்ணீா் அக்கினியா குளம், பனங்குளத்திற்கு செல்வதால் தற்போது குளங்களில் தண்ணீா் நிரம்பி வருகிறது.
எனவே, இந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் ஏலா பகுதியில் நெல் விளைச்சல் பாதிக்காது. மேலும் இந்தக் கால்வாயில் தண்ணீா் செல்லவும், குளத்தின் கரைகள் உடையாமலும் இருக்கவும் நிரந்தர சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.