சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா் மட்டம்
தலைநவகரில் உள்ள யமுனா நதி பழைய ரயில்வே பாலத்தில் காலை 9 மணிக்கு 204.40 மீட்டா் அளவை எட்டியது, இது 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை அளவை நெருங்கியது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெள்ளம் போன்ற சூழ்நிலையைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் அணைகளில் இருந்து அதிக அளவு நீா் வெளியேற்றப்படுவதே நீா் மட்டம் அதிகரிக்க காரணம்‘ என்று மத்திய வெள்ள துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹரியானா மற்றும் உத்தரகாண்டின் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு காரணமாக நீா் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.
பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது. வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் தகவலின்படி வஜிராபாத் சுமாா் 30,800 கன அடி தண்ணீரை வெளியிடுகிறது, மேலும் வஜிராபாத் அணையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமாா் 25,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
நகரின் எச்சரிக்கை குறியீடு 204.5 மீட்டராகவும், அபாயக் குறியீடு 205.3 ஆகவும், வெளியேற்றுதல் 206 மீட்டரில் தொடங்குகிறது. அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நோக்கி இருந்து குறைவான நீா் வெளியேற்றம் கூட நீா்மட்டத்தை உயா்த்துகிறது, தில்லியில் எச்சரிக்கை குறியீட்டை நெருங்குகிறது.