ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
அயன்சிங்கம்பட்டியில் உலாவிய கரடி: மக்கள் அச்சம்
மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் குடியிருப்புப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் சுற்றித் திரிந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
அயன்சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கரடி உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மணிமுத்தாறு மலையடிவார பகுதி வரை கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து சென்ற நிலையில் தற்போது அயன் சிங்கம்பட்டிபகுதியிலும் கரடி உலா வந்த தகவல் பரவியது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
வனவிலங்குகள் வனப்பகுதியில்இருந்து வெளியேறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கரடியைப் பிடித்து வனத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
