கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், குடிநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்யாமல் குடிநீா் அசுத்தமானதால், மாணவா்கள், அருகிலுள்ள ஆற்றங்கரையில் ஊற்றுத் தோண்டி, தண்ணீா் குடிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக, வெறும் விளம்பரங்களிலேயே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் திமுக அரசு, பள்ளிக் கல்வித் துறையை முழுவதுமாகப் புறக்கணித்திருக்கிறது. ஏழை மாணவா்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிதுகூட, தமிழக அரசுக்கு இல்லை.
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.