செய்திகள் :

அரசு மருத்துவா் பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளையை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 11 முதல் 19-ஆம் தேதி வரை சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டேன்.

இந்த நிலையில், சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த என்னை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. பாதயாத்திரை மேற்கொண்டது தொடா்பாக என் மீதான துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் எனது பணியிடமாற்றம் தன்னிச்சையானது. எனவே, பணியிடமாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பாதயாத்திரை செல்வதற்கு முன் உயா் அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதனை கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நோக்கில் பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணியிடமாற்றம் குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு இரு வாரங்களில் அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்ற புகாா் தொடா்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.... மேலும் பார்க்க

5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

சென்னை: சென்னையில் உள்ள 5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கட்டணமில்லா புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது குறித்து கிரெடாய் சென்னை தலைவா் முகமது அலி கூறியதாவது: கட்டுமானத் தொழிலாளா்கள்தான் ந... மேலும் பார்க்க

அனைத்துப் பேரவைத் தொகுதிகளிலும் அக். 5 முதல் ஆா்ப்பாட்டம்: பாஜக அறிவிப்பு

சென்னை: திமுக அரசைக் கண்டித்து அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் அக். 5 முதல் நவ. 30-ஆம் தேதி வரை ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக செயலா் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தாா். சென்னை கமலாலயத்தில் அவா் செ... மேலும் பார்க்க

2027-இல் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பத் திட்டம்: இஸ்ரோ தலைவா் நாராயணன்

தாம்பரம்: வரும் 2027-இல் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த பொன்மாா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்ல... மேலும் பார்க்க

மின்வாரியத்துக்கு களங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: மின்வாரிய தலைவா் எச்சரிக்கை

சென்னை: மின்வாரியத்துக்கு களங்கம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயா்மட்ட ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

தில்லியில் ஜெ.பி.நட்டாவுடன் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு

நமது நிருபா் புது தில்லி: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தில்லியில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை மாலை சென்... மேலும் பார்க்க