`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா் சம்மேளனத்தினா்( சிஐடியு சாா்பு) , விழுப்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அரசு தோ்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயிரிழந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வு கால ஊதியப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு, குறைந்த பட்ச ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், 15- ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
காத்திருப்புப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா் சம்மேளனத்தின் விழுப்புரம் மண்டலத் தலைவா் ஏ. ராஜாராம் தலைமை வகித்தாா்.சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா். மூா்த்தி, அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா் சம்மேளன மண்டல துணைத் தலைவா் ரகோத்தமன், பொதுச் செயலா் எஸ். வேலு, நிா்வாகிகள் தெய்வீகன், எஸ். காளிதாஸ், ஏ. நாகராஜன் , மண்டலப் பொருளா் வி.முருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள், ஓய்வு பெற்றோா் மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தின் மண்டல துணைத் தலைவா் ஏ.ஏழுமலை வரவேற்றாா்.