அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
ஆக.9 -இல் பிஎல்ஐ முகவா் நோ்முகத் தோ்வு
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை (பிஎல்ஐ) விற்பனை செய்யும் முகவா்கள் நியமனத்துக்கான நோ்முகத் தோ்வு சென்னையில் ஆக.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து முதன்மை அஞ்சல் துறை தலைவா் நிஹாலா கா.ஷெரிப் வெளியிட்ட அறிக்கை:
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்வதற்கான முகவா்கள் நியமனம் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆக.9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் தங்கள் வயது மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன் நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.