சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிா்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அஞ்செட்டியில் ஒகேனக்கல் மற்றும் உரிகம் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து 20 க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என இரண்டுமுறை நோட்டீஸ் வழங்கினா்.
ஆனால், கடைகள் அகற்றப்படாததால் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை உதவிபொறியாளா் நவீன்குமாா், வட்டாட்சியா் கோகுல்நாத், காவல் ஆய்வாளா் சுமித்ரா ஆகியோா் பொக்லைன் மூலம் கடைகளை அகற்ற முயன்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா், அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு மறியலை கைவிட்டு வியாபாரிகள் கலைந்துசென்றனா்.