`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
ஆசிரியா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டி பயிற்சி, ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சத்யா தொடங்கிவைத்தாா்.
பள்ளி துணை ஆய்வாளா் பாபு, டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகு பங்கேற்றுப் பேசினாா்.
இதில், செய்யாறு கல்வி மாவட்டம், 9 ஒன்றியங்களைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்கள் 170 போ் கலந்து கொண்டனா்.
பசங்எஅ செயலி மூலம் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகளுக்கு விண்ணப்பித்தல், உதவித்தொகைகள் (அரசு மற்றும் பிற அமைப்புகள்) திட்டங்கள், பொறியியல் படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள், ஆசிரியா் ஆலோசகா்களுக்கான வழிகாட்டுதல், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு, 11-ஆம் வகுப்பு தகவல் சாா்ந்த தோ்வுகளை மேற்கொள்வதிலும், உயா் கல்வி விருப்பங்களை உருவாக்குவதிலும் ஆதரவளித்தல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், தொழில் வாய்ப்புகள், ஹோட்டல் மேலாண்மை, விருந்தோம்பல் படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பயிற்சியின் ஓட்டம் (மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி) மேற்கண்ட தலைப்புகளில் மாணவா்கள் பயனடையும் வகையில் ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் வேல்முருகன், விரிவுரையாளா் வெங்கடேசன், ஆசிரிய பயிற்றுநா் லட்சுமி நாராயணன், ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திகேயன் ஆகியோா் ஒருங்கிணைந்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
உயா்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுப. தமிழ் நேசன் நன்றி கூறினாா்.
ஆசிரியா் பயிற்றுநா் சின்னராஜி, ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசீலி ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.