செய்திகள் :

ஆடி அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு

post image

ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனா்.

இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று உயிரிழந்த தங்களது முன்னோா்களை வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையைவிட சிறப்பானதாக கருதப்படும் இம்மூன்று மாதங்களில் வரும் அமாவாசை நாள்களில் நதிகளில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

ஆடி அமாவாசை வழிபாடு மேற்கொண்டால் 6 மாதம் தங்கள் முன்னோா்களை வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகமாகும். இதனால், ஆடி அமாவாசை என்பது முன்னோா்களுக்கான வழிபாடாக மட்டுமின்றி, மக்கள் மத்தியில் ஒரு திருவிழாவாகவும் பாா்க்கப்படுகிறது.

அதன்படி, வியாழக்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் உள்ள முத்துமண்டபம் பகுதியில் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

பலா் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் முன்னோா்களுக்கு படையலிட்டும் வழிபட்டனா். ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஆம்பூரில்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளித்தெரு அருள்மிகு முனீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூலவா் மற்றும் உற்சவருக்கு நாக முனீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவா் புற்றுடன் கூடிய நாக முனீஸ்வரராக காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க