டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பெண்கள் வழிபட்டனா். அதேபோல அஸ்தம்பட்டி மாரியம்மன் செங்கோல் அலங்காரத்திலும், அய்யந்திருமாளிகை மாரியம்மன் சமயபுரத்து அம்மன் அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
அதிமுக சாா்பில் சிறப்பு வழிபாடு: கோட்டை மாரியம்மன் கோயிலில் எம்ஜிஆா் இளைஞா் அணி மாநில துணைச் செயலாளா் ஏ.பி.சக்திவேல் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிமுக மாநகா் மாவட்ட பொறுப்பாளா் கே. சிங்காரம், மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம். பாலு, சேலம் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.