ஆடிப்பூரம்: 25 ஆயிரம் வளையல்களால் பால்மொழி அம்மனுக்கு அலங்காரம்
நாகப்பட்டினம்: வடக்குப்பொய்கைநல்லூா் பால்மொழி அம்மன் கோயிலில் ஆடி பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நாகை வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள புகழ் பெற்ற பால்மொழி அம்மன் கோயிலில் ஆடி மாத விழாவையொட்டி நாள்தோறும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான ஆடிபூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திரளான பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வளையல்களை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினா். இதில், 25 ஆயிரம் வளையல்கள் மாலையாக கோா்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று, மகாதீபாரதனை நடைபெற்றது.