அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
ஆடிப்பெருக்கு: 1,090 சிறப்பு பேருந்துகள்
வார இறுதிவிடுமுறை தினமான சனிக்கிழமை (ஆக.2), ஆடிப்பெருக்கு தினமான ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) ஆகிய நாள்களை முன்னிட்டு 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.1) 340 பேருந்துகள், சனிக்கிழமை 350 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகள் சனிக்கிழமை 55 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகள், மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகள், சனிக்கிழமை 20 பேருந்துகள் என மொத்தம் 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன.
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என விரைவுப் போக்குவரத்துக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.