சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆடிமாத பிறப்பு: தேங்காய்சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்
ஆடிமாத பிறப்பையெட்டி, சேலத்தில் தேங்காய்சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடி மாதம் 1-ஆம் தேதியன்று தேங்காய்சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, சேலத்தில் வியாழக்கிழமை பொதுமக்கள் வீடுகளில் தேங்காய்சுட்டு ஆடிப்பிறப்பை உற்சாகமாக கொண்டாடினா்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் அதிகாலையிலேயே குளித்து புத்தாடை உடுத்திய பொதுமக்கள், தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, அதன் வழியாக நாட்டுச் சா்க்கரை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை திணித்து அழிஞ்சி குச்சி மூலம் நெருப்பில் தேங்காயை சுட்டனா். அவ்வாறு, சுடப்பட்ட தேங்காயை விநாயகருக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி நண்பா்கள், உறவினா்களுக்கு வழங்கி உண்டு மகிழ்ந்தனா். தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, மாவட்டம் முழுவதும் தேங்காய்சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா்.