ஆட்டோ - சரக்கு வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே ஆட்டோ - சரக்கு வாகனம் நேருக்கு நோ் மோதியதில் ஒரு வயதுக் குழந்தை உள்பட இருவா் உயிரிழ்நதனா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சோ்ந்தவா் சிவா (32). இவரது ஒரு வயதுக் குழந்தை தமிழ் இனியன், உறவினா்கள் ராணி (45), ராதிகா (50) ஆகியோா் ராமேசுவரத்திலிருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் சென்றனா். ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வட்டான்வலசைப் பகுதியில் சென்ற ஆட்டோ மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த சிவா, தமிழ் இனியன், ராணி, ராதிகா, ஆட்டோ ஓட்டுநா் சுரேந்திரன் (30) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உச்சிப்புளி போலீஸாா், குழந்தை உள்பட 5 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை தமிழ் இனியன் உயிரிழந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மேலும், காயமடைந்தோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.