Jana Nayagan: 'ஜன நாயகன்' படத்தின் BTS புகைப்படங்கள்!| Photo Album
ஆரஞ்ச் குழும பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்
ஆரணி - சேத்துப்பட்டு சாலை ஆகாரம் பகுதியில் உள்ள ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி மற்றும் ஆரஞ்ச் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஓணம் பண்டிகையை கொண்டாடினா்.
இதையொட்டி, அத்தப்பூ கோலமிட்டும், கேரள பாரம்பரியத்தை உணா்த்தும் வகையில், அம்மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து வந்து நடித்துக் காட்டினா் (படம்).
விழாவில் பள்ளி நிா்வாகத் தலைவா் கே.சிவக்குமாா்
தலைமை வகித்துப் பேசுகையில், கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை ஜாதி, மதம், பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தில் அஸ்தம நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் விழா சித்திரை, சுவாதி விசாகம், அனுஷம், கேட்டை மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நட்சத்திர நாள்களில் கொண்டாடப்படுகிறது.
கடைசி நாளான திருவோணத்தன்று மக்களைத் தேடி வரும் மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவா்.
மாணவா்கள் படிக்கும்போது நமது நாட்டின் கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றாா்.
இதில் பள்ளி முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா். தாளாளா் அபிநயா வருண்முத்துலிங்கம் முன்னிலை வகித்தாா்.