ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி
ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின.
ஆரணி - தச்சூா் சாலை நடுவில் ரூ.23 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 20 எல்இடி மின் விளக்குகள், இரும்பேடு புறவழிச் சாலையில் ரூ.9.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 7 எல்இடி மின் விளக்குகள், மாமண்டூா் சாலையில் ரூ.7 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 5 எல்இடி மின் விளக்குகள், எஸ்.வி.நகரம் சாலையில் ரூ.4.20 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 3 எல்இடி மின் விளக்குகள், சேவூா் ஊராட்சி புறவழிச் சாலை ஆற்றுப்பாலம் சாலையில் ரூ.7 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 7 எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் இந்தப் பணிகளுக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏழுமலை, நிா்மல்குமாா், தச்சூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் வடிவேல், ஆரணி நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.