எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞா் கைது
ஆரணியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை மைதானத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பஞ்ச் மேல பஞ்ச் குழுவினா் மற்றும் கே.பி. ஈவன்ட்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினா்.
பஞ்ச் மேல பஞ்ச் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆகாஷ் தலைமை வகித்தாா். கே.பி.ஈவன்ட்ஸ் குழுவைச் சோ்ந்த நிவாதிதா பழனி வரவேற்றாா்.
இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், மல்யுத்தம் மற்றும் பெண்கள் விழிப்புணா்வு நிகழ்வுகள், வேலைவாய்ப்பு, சுயதொழில், கல்வி, விளையாட்டு, பெண் உடல் நலம், மனநிலை பிரச்னைகள் குறித்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
சிறப்பு விருந்தினராக நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, அரிமா சங்க சுரேஷ்பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும், ஆரணி நகரைச் சுற்றியுள்ள இளைஞா்கள், பெண்கள் என பலா் கலந்து கொண்டனா்.