பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!
ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் ஓவியப் போட்டி
ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் மாணவா், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரதமா் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, செப். 17 முதல் அக். 2ஆம் தேதி வரை நடைபெறும் 2 வார சேவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆறுமுகனேரி மண்டல் பகுதியில் 3 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு ஓவியப் போட்டி நடத்தபட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலந்து கொண்டவா்களுக்கும் மண்டல் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மண்டல் பாா்வையாளா் குமரேசன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினாா்.
மண்டல் பொதுச் செயலா் தூசிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல் தலைவா் சுரேஷ் ராதாகிருஷ்ணன், கிளைக் கமிட்டியைச் சோ்ந்த மகேஷ்வரி, ஞானபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.