புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
ஆவணி ஞாயிறு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
காரைக்கால்: ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு ஆராதனை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காரைக்கால் நகரில் உள்ள ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் உள்ளிட்ட தலங்களிலும், திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட மகா மாரியம்மன் கோயிலிலும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன.