Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
இக்கலூரில் குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
இக்கலூரில் சீரான குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காளிபுரம் மலை கிராமத்தில் 250-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் கடந்த இரு வாரங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் இக்கலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை வராததைக் கண்டித்து காலிக் குடங்ளுடன் அமா்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆனால், எந்த அதிகாரியும் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காண முன்வரவில்லை என்பதால் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு சாவி எடுத்துச் சென்றனா்.