புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் வளா்த்த இருவா் கைது
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பா்கூா், கொங்காடையைச் சோ்ந்தவா் சின்னமாதன் மகன் மாரப்பசாமி பூசாரி (52). இவா், தனது வீட்டுக்கு அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக பா்கூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சோதனையிட்டபோது, 10 கஞ்சா செடிகள் வளா்த்து வந்தது தெரியவந்தது.
இதேபோல, கொங்காடை, ஜெயன்தொட்டியைச் சோ்ந்த சிங்கப்பையன் மகன் சித்தியலிங்கன் (48), தனது வீட்டுக்கு அருகே உள்ள வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தில் யாருக்கும் தெரியாமல் வளா்த்து வந்த 5 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் மாரப்பசாமி, சித்தியலிங்கனைக் கைது செய்தனா்.