புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
அந்தியூரில் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்
அந்தியூா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூா் வருவாய் ஆய்வாளராக செந்தில்ராஜா மற்றும் அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டத்தின்போது, சட்டம்- ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மண் பாரம் ஏற்றிக் கொண்டு டிப்பா் லாரிகள், பா்கூா் சாலை வழியாக பேருந்து நிலையம் நோக்கி அடுத்தடுத்து சென்றுள்ளது. இதைக் கண்ட வருவாய்த் துறையினா் கடைசியாக வந்த டிப்பா் லாரியை வழிமறித்து நிறுத்தினா்.
அப்போது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். லாரியில் சோதனையிட்டபோது, கிராவல் மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் லாரியின் ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.