லாா்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு
இதனால் இன்றுவரை பிரபு சாலமனிடம் பேசுவதில்லை... விஷ்ணு விஷால் குற்றச்சாட்டு!
நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் பிரபு சாலமன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். மினிமம் கியாரண்டி நாயகனாக இவர் நிறைய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, 'ஒஹோ எந்தன் பேபி' நாளை (ஜூலை 10) வெளியாகிறது.
மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இரண்டு வானம், ஆர்யன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதுபோக, கட்டாகுஸ்தி - 2, ராட்சசன் - 2 படங்களில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஷ்ணு விஷால், “காடன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நான் நடித்திருந்தேன். கதைப்படி, படத்தில் நடிகர் ராணா டக்குபதி இறந்ததும் கிளைமேக்ஸில் நான் காட்டைப் பாதுகாப்பேன். ஆனால், படம் வெளியாவதற்கு 5 நாள்கள் முன் இடைவேளை வரை மட்டுமே என்னுடைய காட்சிகள் வைக்கப்பட்டு மற்ற அனைத்தும் நீக்கப்பட்டன. இயக்குநர் பிரபு சாலமன் இதுகுறித்து என்னிடம் எதுவும் கூறவில்லை. வேறொரு நபர் மூலமாக அறிந்துகொண்டேன்.
ஆனால், ஒரு கடமையாக காடன் படத்திற்கான புரமோஷன்களை செய்தேன். கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாத இந்தச் செயலால் இன்றுவரை நான் பிரபு சாலமனிடம் பேசுவதில்லை. என் சினிமா பயணத்தில் இவரைப்போல் நிறைய பேர் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மலையாள இலக்கியம் வலுவாக இருப்பதால் திரைப்படங்கள் தரமாக இருக்கின்றன: மோகன்லால்