இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!
திரையரங்குகளில் இந்த வாரம் 5 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. எந்தெந்தத் திரைப்படங்கள் நாளை(ஜூலை 10) மற்றும் நாளை மறுநாள்(ஜூலை 11) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
எழில் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்துள்ள 'தேசிங்கு ராஜா 2' படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.
விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’ஓஹோ எந்தன் பேபி’. இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது.
அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ள மாயக்கூத்து திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. இப்படத்தில் டெல்லி கணேஷ், சாய் தீனா, நாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
5 Tamil films are releasing in theaters this week.
இதையும் படிக்க: டிமான்ட்டி காலனி மூன்றாம் பாகத்திலும் பிரியா பவானி சங்கர்!