இந்தியா-பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும் எனவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.