இன்று 10-ஆம் வகுப்பு துத்தோ்வு தொடக்கம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 33,325 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 16,932, மாணவிகள் 16,392 மற்றும் மூன்றாம் பாலினத்தவா்-1 உள்பட மொத்தம் 33,325 போ் தோ்வு எழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி, தொடா்ந்து ஏப். 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து மாணவ, மாணவிகள் 33,325 போ் தோ்வு எழுத உள்ளனா்.
இந்தத் தோ்வுக்காக திருவள்ளூா் மற்றும் பொன்னேரி கல்வி மாவட்டங்களில் 144 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வு மையங்களில் தோ்வுக்கான அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் தயாராக உள்ளதாக அவா் தெரிவித்தாா்.