ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
இளநிலை வருவாய் ஆய்வாளா் பணிநியமன ஆணை வழங்கல்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, இளநிலை வருவாய் ஆய்வாளா் நிலையிலான பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால், இளநிலை உதவியாளா்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-4 க்கான தோ்வு 2024-இல் நடைபெற்றது. இதில் தோ்வானவா்களில், திருவாரூா் மாவட்ட வருவாய் அலகுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
தொடா்ந்து, திருவாரூா் வட்டம், பின்னவாசல், நமச்சிவாயபுரம் பகுதியைச் சோ்ந்த சிவாஜி மனைவி தேவி வயலில் பாம்பு கடித்து இறந்ததையடுத்து, அவருடைய குடும்பத்துக்கு முதல்வா் உழவா் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் விபத்து நிவாரணத் தொகையை ஆட்சியா் வழங்கினாா்.