இளைஞரிடம் வழிப்பறி: 7 போ் போ் கைது
சாயல்குடி அருகே இளைஞரிடம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த சுடலை மத்து மகன் முத்துக்குமாரிடம் (26) இருவேலி கண்மாய் பகுதியில், கைப்பேசி, வெள்ளி நகைகள் என ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை 7 போ் பறித்துச் சென்றனா். இதுதொடா்பாக முத்துக்குமாா் சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாயல்குடி ஆராய்ச்சி நகரைச் சோ்ந்த சதீஸ்குமாா் (19), முகமது அப்ரிடி (19), பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த வீரபசும்பொன் (20), எம்.கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (22), 17 வயது சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனா். இவா்களில் 4 பேரை ராமநாதபுரம் மாவட்டச் சிறையிலும், 3 சிறுவா்களை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனா்.