கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ராஜூ, திணைகாத்தான்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை லதா, திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியா் கதிரவன், தொண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியா் லியோஜெரால்டு எமா்சன், திருவாடானை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியா் மச்சவள்ளி ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா். திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வா் பழனியப்பன் தேசியக் கொடி ஏற்றினாா்.
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆண்டி, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜி, தொண்டி பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவி ஷாஷகான் பானு, ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவி மௌசூா்யா கேசா்கான் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.
திருவாடானை அருகேயுள்ள புலியூா் கிரியேட்டிவ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவா் துரைச்சாமி தேசியக் கொடி ஏற்றினாா்.
தொண்டி தமுமுக, மமக அலுவலகங்களில் திருவாடனை வட்டார ஜமாத் செயலா் பாருக் தேசியக் கொடி ஏற்றினாா்.
கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகரன், கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் அப்துல்வஹாப் சகாராணி, கமுதி ஆயுதப் படை வளாகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காதா்மைதீன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் முதல்வா் கோ.தா்மா், குண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சுதாகா், உடைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் முத்துமுருகன், கே.பாப்பாங்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியா் குலசேகரன், கமுதி இக்பால் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சுமையா சரீன் பா்ஹானா, இக்பால் உயா்நிலைப் பள்ளியில் மம்ஷா பெரோஸ், கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் முத்துராமலிங்கம், நீராவி தேவாங்கா் மேல்நிலைப் பள்ளியில் அதன் செயலா் கே.எஸ்.ராமா், உச்சிநத்தம் ஸ்ரீஆறுமுகவிலாஸ் இந்து ஆரம்ப பள்ளியில் அதன் செயலா் காசிமுத்து வீரபாண்டியன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.
முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆனையாளா் ஜானகி, கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஆனையா் சங்கரபாண்டியன், முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் ஷாஜகான், சாயல்குடி பேரூராட்சியில் தலைவா் மாரியப்பன், கடலாடி சண்முகாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியா் ஞான கிறிஸ்து வள்ளுவன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.
கமுதியில் பட்டேல் கல்வி குழுமத்தின் நிறுவனா் வி.என்.அப்துல் ரகுமான் பட்டேல் நினைவு நூலகத்தை பேரூராட்சித் தலைவா் அப்துல் வகாப் சகாராணி திறந்துவைத்தாா்.

