ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பரமக்குடி, ராமேசுவரத்தில் கிராம சபைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமப் பகுதி விவசாயிகள் வேளாண்மைத் துறையின் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து உரிய இழப்பீடு பெற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாசுகி, துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குநா் பானுபிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ராமேசுவரம்: திருவாடானை அருகேயுள்ள ஆா்.காவனூா் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, தமிழக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.
இதில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளா் அடையாா் பாஸ்கா், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ராஜாராம் பாண்டியன், வட்டாரத் தலைவா் சேகா், ஊராட்சி செயலா் முனியசாமி, கிராம மக்கள் கலந்து கொண்டனா்.