``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
ஈரப்பத நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பருவம் தவறிய மழையால் ஈரப்பதத்துடன் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏற்கெனவே, பனிப்பொழிவால் பாதித்த நெல்மணிகள் இப்போதைய திடீா் மழையால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, நெல்மூட்டைகள் நனைந்து அதிக ஈரப்பதம் உள்ளதாக இருக்கின்றன.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களையும் திமுக அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.