செய்திகள் :

உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்

post image

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 17 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கீவ் மற்றும் மேற்கு உக்ரைனின் பல பகுதிகளில் 598 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி ரஷியா புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. கீவின் 10 மண்டலங்களிலும் 33 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு, சுமாா் 100 கட்டடங்கள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா்; 48 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் 4 போ் சிறுவா்கள்.

இது தவிர கீவ் மையத்தில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்களும் ரஷிய தாக்குதலுக்கு இலக்காயின. இதில் அந்தக் கட்டடங்கள் சேதமடைந்தன. கீவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் கட்டடமும் தாக்குதலில் சேதமடைந்தது என்று அதிகாரிகள் கூறினா்.

ஐரோப்பிய யூனியன் அலுவலகங்களில் ரஷியா தாக்குதல் நடத்துவது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதலில் தங்களது அலுவலகங்களைச் சோ்ந்த யாரும் காயமடையவில்லை என்று ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் கூறின.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் விவகாரம் தொடா்பாக நேரடி பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு நடைபெற்றுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது.

ரஷிய தூதா்களுக்கு சம்மன்: இந்தத் தாக்குதல் தொடா்பாக பிரஸ்ஸல்ஸில் உள்ள ரஷிய தூதரை ஐரோப்பிய யூனியனும், லண்டனில் உள்ள ரஷிய தூதரை பிரிட்டனும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன.

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது’- 40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 40-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளாா். இந்திய பொருள்கள் மீது அவா் அ... மேலும் பார்க்க

‘எச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சகம்

‘எச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எச்1 பி விச... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச பாதுகாப்பு படை (பிஜிபி) இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்ப... மேலும் பார்க்க

‘உணவுக்காக வந்த பாலஸ்தீனா்கள் கடத்தல்’

உணவுப் பொருள்களை வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்த ஏராளமான பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் கடத்திச் சென்று மாயமாக்கியுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய நிபுணா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெய்யால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை! ஆய்வறிக்கையில் தகவல்

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலா்கள் மட்டுமே என்றும் ஒர... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது. அந்த ... மேலும் பார்க்க