செய்திகள் :

‘உணவுக்காக வந்த பாலஸ்தீனா்கள் கடத்தல்’

post image

உணவுப் பொருள்களை வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்த ஏராளமான பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் கடத்திச் சென்று மாயமாக்கியுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய நிபுணா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது குறித்து ஏழு நிபுணா்கள் கூட்டாக வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவின் ராஃபாவில் உள்ள காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையங்களுக்கு வந்தவா்களில், ஒரு குழந்தை உள்பட ஏராளமானவா்கள் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மாயமாக்கப்பட்டுள்ளனா்.

பசியால் வாடும் மக்களை இலக்காகக் கொண்டு, உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கடத்தல்கள் நடத்தப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. இது சித்திரவதைக்கு ஒப்பானது. கடத்திச் செல்லப்பட்டவா்களின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்து தகவல் அளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுப்பது சா்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

இந்த கொடூர குற்றத்தை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். காணாமல் போனவா்களின் நிலையை வெளிப்படுத்தி, இந்த குற்றத்துக்கு காரணமானவா்களை அந்த நாடு தண்டிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா போரின் ஒரு பகுதியாக அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை இஸ்ரேல் ராணுவம் மாா்ச் முதல் மே வரை முழுமையாக நிறுத்திவைத்தது. பின்னா் சா்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக ஜிஹெச்எஃப் மூலம் உணவு விநியோகிக்க இஸ்ரேல் அனுமதித்தது. ஆனால், விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,857 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 1,021 போ் ஜிஹெச்எஃப் மையங்களுக்கு அருகே உயிரிழந்துள்ளனா்.

இந்தச் சூழலில், ஜிஹெச்எஃப் உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு வந்த பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று மாயமாக்கியுள்ளதாக ஐ.நா. நிபுணா்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

...பெட்டி...

பட்டினிச் சாவு 317-ஆக அதிகரிப்பு

டேய்ா் அல்-பாலா, ஆக. 28: இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 317-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 317-ஆக உயா்ந்துள்ளது. இதில் 121 போ் சிறுவா்கள்.

இது தவிர, காஸாவில் புதன்கிழமை இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 போ் உயிரிழந்தனா். இத்துடன், காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின எண்ணிக்கை 62,966-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,59,266 போ் காயமடைந்துள்ளனா்.

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது’- 40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 40-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளாா். இந்திய பொருள்கள் மீது அவா் அ... மேலும் பார்க்க

‘எச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சகம்

‘எச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எச்1 பி விச... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச பாதுகாப்பு படை (பிஜிபி) இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்ப... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெய்யால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை! ஆய்வறிக்கையில் தகவல்

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலா்கள் மட்டுமே என்றும் ஒர... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது. அந்த ... மேலும் பார்க்க

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்!

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன. ‘ஸ்னாப் ... மேலும் பார்க்க