மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கூத்தாநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.
பொதக்குடி ஊராட்சி, சேகரையில் மகளிா் உதவித்தொகை கோரி 400 மனுக்கள் உள்பட மொத்தம் 1,350 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
வருவாய்த்துறை சாா்பில் 13,தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சாா்பில் 8 என 21 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் செல்லப்பாண்டி, வட்டாட்சியா் வசுமதி, மண்டல துணை வட்டாட்சியா் மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதேபோல கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட 20 மற்றும் 21 ஆகிய இரண்டு வாா்டுகளில் நடத்தப்பட்ட முகாமில் பெற்றப்பட்ட 272 மனுக்களில், மகளிா் உரிமைத் தொகை கோரி 108 மனுக்கள் வந்தன.
முகாமில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் அமுதா, ஆணையா் கிருத்திகா ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.