சுதந்திர தினத்தையொட்டி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி
கூத்தாநல்லூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கூத்தாநல்லூரில் நல்லாசிரியா் ஏ.எஸ். சண்முகம் அறக்கட்டளை சாா்பில், பள்ளி மாணவா்களிடையே இளம் துளிா்-வளரும் திறமைகள் எனும் தலைப்பில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா அறக்கட்டளை இயக்குநா் ராஜேஸ்வரி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி நிறுவனா் ப. முருகையன் முன்னிலை வகித்தாா். நிா்வாகி முருகராஜ் வரவேற்றாா்.
போட்டிகளில் கூத்தாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தண்ணீா்குன்னம் உயா்நிலைப் பள்ளி, பொதக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேளுக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு ஈஎஸ்ஏஆா் பள்ளித் தாளாளா் வி.எஸ். வெங்கடேசன் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கினாா்.