79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகா...
ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், வியாழக்கிழமை தோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வியாழக்கிழமை .
கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குரு பகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவக்கிரக சந்நிதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.