முதல்வா் கோப்பை போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
திருவாரூா் மாவட்டத்தில், முதல்வா் கோப்பை போட்டிகளில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 67 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பா் முதல் அக்டோபா் வரை நடத்தப்பட உள்ளது.
இதில், பங்கேற்க, இணையதளம் மூலம் ஆக.20-ஆம் தேதி வரை முன்பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்பவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என தெரிவித்துள்ளாா்.