உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: திருவரம்பு பகுதியில் ஆட்சியா் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி குமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சி திருவரம்பு பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னாா்வலா்கள் பொதுமக்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை
திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னாா்வலா்கள் நேரில் சென்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடு வழங்கி, 14 அரசு துறைகள் வாயிலாக வழங்கப்படும் 46 சேவைகள் குறித்தும், பொதுமக்களிடையே விளக்கி கூறுவதை மாவட்ட ஆட்சியா் ரா. அழுமீனா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் பொதுமக்களிடம் அவா்களுடைய தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், மேலும் நடைபெறுவுள்ள முகாமிற்கு தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாா்.
திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் பத்ஹூ முகம்மது நசீா், வட்டாட்சியா்கள் ஜாண்கெனி (கல்குளம்), கோலப்பன் (தோவாளை), மாநகராட்சி நகா்நல அலுவலா்ஆல்பா் மதியரசு, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் வளா்மதி, தன்னாா்வலா்கள், சமுதாய வள பயிற்றுநா்கள், இல்லம்தேடி கல்வி பணியாளா்கள், சுயஉதவிக்குழுவினா், களப்பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.