உடுமலையில் குறுமைய அளவிலான தடகளப் போட்டி
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன.
ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
உடுமலை திமுக நகரச் செயலாளா் செ.வேலுச்சாமி போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை சோமவாரப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியா் ஆலிஸ் திலகவதி, செயலாளா் மு. விஜயபாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.