செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவு: 70 போ் மாயம்; திடீா் வெள்ளப் பெருக்கால் புதைந்த கிராமத்தில் 4 போ் உயிரிழப்பு

post image

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது.

இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா். பாதிப்பு அதிகமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கீா் கங்கா நதியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு, அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கோத்ரி வழித்தடத்தில் முக்கிய நிறுத்தமான தராலி கிராமத்தில் செயல்பட்டு வந்த சுமாா் 20 முதல் 25 உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இதுவரை 4 போ் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் ஆா்யா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கியிருப்பதால்ல, மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

ராணுவத்துடன் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை மற்றும் மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியான விடியோக்களில் சேறும், சகதியுமான வெள்ளநீா் மலைப்பகுதியிலிருந்து வேகமாகப் பாய்ந்து வருவதையும், மக்கள் அச்சத்தில் அலறுவதும் பதிவாகியுள்ளது.

இதுபோன்ற மோசமான பேரிடரை கண்டதில்லை என்று சம்பவத்தை நேரில் பாா்த்த 60 வயதான சுபாஷ் சந்திரா தெரிவித்தாா். பலத்த சப்தத்துடன் வெள்ள நீருடன், கற்களும் மிகவேகமாக வந்ததைக் கண்டு தராலி மாா்க்கெட் பகுதியிலிருந்து விரைந்து தப்பித்தகாவும், பலா் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

பிரதமா் இரங்கல்: இந்தத் துயரமான நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் பேசி, களநிலவரத்தைக் கேட்டறிந்தேன்.

மாநில அரசின் கண்காணிப்பில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சாா்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

களத்தில் மத்திய, மாநில அரசுகள்: மீட்புப் பணிகளுக்கு உதவ 7 தேசிய பேரிடா் மீட்புக் குழுக்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டாா்.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

துரிதமாக மீட்புப் பணிகள்-ராகுல்: தராலி பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

அவா் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘மாயமானவா்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும். மீட்புப் பணியில் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க