செய்திகள் :

உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் மார்னஸ் லபுஷேன்!

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) முதல் லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறக்கப்படுவார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு இதுவரை சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையவில்லை என்றே கூறலாம். ஸ்டீவ் ஸ்மித், சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டார்கள். இருப்பினும், இவர்களில் யாரும் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நினைக்கவில்லை.

இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேனுக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து அணியில் இணைந்துள்ள கேமரூன் கிரீன் 3-வது வீரராக களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் 6-வது வீரராக களமிறக்கப்படவுள்ளார்.

இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் ஆஸி. சாம்பியன் பட்டம் வெல்லும்: முன்னாள் இந்திய வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை லபுஷேன் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரபாடா 5 விக்கெட்டுகள்: ஆஸி. 212 ரன்களுக்கு ஆல் அவுட்!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 212-க்கு ஆல் அவுட்டானது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸி. அணியின் டா... மேலும் பார்க்க

இன்னும் நிறைய ஓய்வு அறிவிப்புகள் வரலாம்; நிக்கோலஸ் பூரன் ஓய்வுக்குப் பின் டேரன் சம்மி கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஓய்வு அறிவிப்புகள் வரலாம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.மேற்கிந்தித் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூ... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் 42-ஆவது அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் அசத்திவரும் ஆஸி. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 42-ஆவது டெஸ்ட் அரைசதத்தினை நிறைவு செய்துள்ளார். லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென... மேலும் பார்க்க

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடவுள்ளார்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியங்களால் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இந்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ட... மேலும் பார்க்க