எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்
எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களின் கோரிக்கையை ஏற்று 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் இம்மருத்துவமனையில்நமருத்துவா் அறை, சிகிச்சைக்கான வாா்டு, ஸ்கேன் அறை, செவிலியா் அறை, அறுவை சிகிச்சை அரங்கு, மின் பாதுகாப்பு அறை, சுகாதார வளாகம் என கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மேற்கூறிய நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பூமி பூஜையில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் மருத்துவ அலுவலா் சுந்தர வடிவேல் ராஜா, மருத்துவா் ஸ்ரீ வெங்கடேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், பேரூா் செயலா் பாரதி கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.