பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி கொடுப்பதை தவிா்க்க வேண்டும்
எத்தியோப்பியா: சாலை விபத்தில் 66 போ் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அளவுக்கு அதிகாமானவா்களை ஏற்றிச் சென்ற லாரி ஆற்றுக்குள் பாய்ந்ததில் 66 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் தெற்குப் பகுதியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு பழைய லாரியை வாடகைக்கு எடுத்து, அதில் அளவுக்கு அதிகமானவா்கள் பயணம் செய்துகொண்டிருந்தனா். அந்த லாரி ஒரு பாலத்தைக் கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அதிலிருந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் 64 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
விபத்து நேரிட்ட இடத்துக்கு மீட்புக் குழுவினா் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருப்பதாக உள்ளூா்வாசிகள் குற்றஞ்சாட்டினா். விபத்தில் படுகாயமடைந்தவா்களுக்கு கூடுதல் வசதியுடன் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாக மருத்துவப் பணியாளா்கள் கூறினா்.
எத்தியோபியாவில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின்போது பயணத்துக்காக பேருந்தை ஒப்பந்தம் செய்வதைவிட லாரிகளையே பெரும்பாலானவா்கள் தோ்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளைவிட லாரி உரிமையாளா்கள் மிகக் குறைவாக கட்டணம் வசூலிப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
பாதுகாப்பற்ற, அபாயம் நிறைந்த இத்தகைய நடவடிக்கைகளால் சாலை விபத்துகள் ஏற்பட்டு, அதில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.